மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
25-May-2025
ப.வேலுார்: ப.வேலுார், எல்லையம்மன் கோவிலில் நானுாறு ஆண்டு பழமையான ஏகாம்பரேஸ்வரர் சந்நதி அமைந்துள்ளது. பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை, 4:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கோவிலில் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. அதன்பின், ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், ப.வேலுார் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது.
25-May-2025