உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

ப.வேலுார், டிச. 24--பரமத்தி அருகே, சித்தம்பூண்டி, சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் தனசேகரன், 29; எலக்ட்ரீஷியன். அதே பகுதியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவியை, கடந்த, ஜூலை மாதம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். மாணவியின் பெற்றோர், இதுகுறித்து ப.வேலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான தனசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.இந்நிலையில், சித்தம்பூண்டி பகுதியில் தனசேகரன் இருப்பதாக வந்த தகவலையடுத்து, ப.வேலுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி(பொ) தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தனசேகரனை போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ