உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள்: நடவடிக்கைக்கு மனு

போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள்: நடவடிக்கைக்கு மனு

நாமக்கல், 'ஊசி மூலம் போதை பழக்கத்திற்கு மாறும் இளைஞர் சமுதாயத்தை மீட்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்து பாதுகாப்பு படை மாவட்ட தலைவர் வெங்கட்ராஜ் சுவாமிஜி, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்து பாதுகாப்பு படை என்ற அமைப்பு மூலம், இந்து மதத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமின்றி, நாட்டின் அனைத்து மத இளைஞர்களையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம். தமிழகம் முழுவதும் பரவலாக ஊசி மூலமாக செலுத்தப்படும் போதை வஸ்து மூலம் இளைஞர்கள் மிகவும் மோசமாக போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இந்த பழக்கத்தின் மூலமாக நம் தமிழக சமுதாயம் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதை போர்க்கால அடிப்படையில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை