மேலும் செய்திகள்
சிறுமியை சீண்டிய முதியவர் சிக்கினார்
02-Aug-2025
நாமக்கல், நாமக்கல் அடுத்த எர்ணாபுரம், ரங்கப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன், 49; இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு டீ குடிக்க வந்தார். டீ குடித்துவிட்டு அந்த கடை முன் உள்ள திட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த வாலிபர் ஒருவர், அவரை தாக்கி, பையில் இருந்த மொபைல் போன் மற்றும் 5,800 ரூபாயை பறித்துக்கொண்டு, கொலைமிரட்டல் விடுத்துவிட்டு சென்றுவிட்டார்.இதுகுறித்து, பத்மநாபன் நாமக்கல் போலீசில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பத்மநாபனிடம் மொபைல் போன், பணத்தை பறித்துச்சென்றது, என்.கொசவம்பட்டியை சேர்ந்த யோகேஸ்வரன், 19, என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
02-Aug-2025