ஆர்ப்பாட்டம் 48 பேர் கைது
கோத்தகிரி: கோத்தகிரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த, தி.மு.க., வினர், 48 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார், பொது இடத்தில் போதை பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியாகி உள்ளது. இந்நிலையில், அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தி, தி.மு.க., மாணவர் அணி சார்பில், தடையை மீறி, கோத்ததிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவரணி மாவட்ட செயலாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். அதில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், பீமன், நகராட்சி தலைவர் ஜெயகுமாரி உட்பட, 48 பேரை போலீசார் கைது செய்தனர்.