உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தெரு நாய்கள் கூட்டம்; பயணிகளுக்கு சிரமம்

தெரு நாய்கள் கூட்டம்; பயணிகளுக்கு சிரமம்

பந்தலுார் : பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பஜாரில் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.தமிழக எல்லை பகுதியாக அய்யன்கொல்லி உள்ளது. இங்கு, தமிழகம், கேரளா, கர்நாடகா வாகனங்கள் நாள்தோறும் வந்து செல்கின்றன.பஜார் பகுதியை சுற்றிலும், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் மக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஜார் பகுதியில் அதிக அளவிலான தெருநாய்கள் முகாமிட்டு, பயணிகளையும், பள்ளி மாணவர்களையும் துரத்தி வருகிறது. சமீபகாலமாக, தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து, குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், திறந்த வெளியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உட்கொண்டு, தெரு நாய்கள் உலா வருவது பொதுமக்களை அச்சமடைய செய்து உள்ளது. எனவே, உலா வரும் தெரு நாய்களை பிடித்து செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி