உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஸ்கூட்டரில் சென்றவர் பஸ் சக்கரம் ஏறி பலி

ஸ்கூட்டரில் சென்றவர் பஸ் சக்கரம் ஏறி பலி

பாலக்காடு : பாலக்காடு அருகே, ஸ்கூட்டரில் சென்றவர் பள்ளி பஸ்சின் அடியில் சிக்கி இறந்தார்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் மண்ணம்பற்றை பகுதியைச்சேர்ந்தவர் சுவாமிநாதன் 54. அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று காலை, 8.40 மணி அளவில் ஸ்கூட்டரில், வீட்டில் இருந்து ஸ்ரீகிருஷ்ணபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஸ்ரீகிருஷ்ணபுரத்தில் செயல்படும் தனியார் பள்ளியின் பஸ், முந்தி சென்றபோது ஸ்கூட்டர் மீது மோதியது.இதில் சாலையில் கீழே விழுந்த சுவாமிநாதன் மீது, பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ