உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரும்பு கம்பி குத்திய நிலையில் உலா வரும் காட்டெருமை

இரும்பு கம்பி குத்திய நிலையில் உலா வரும் காட்டெருமை

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ஜெயந்தி நகர் பகுதியில், இரும்பு கம்பி குத்திய நிலையில், உலா வரும் காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டெருமைகளின் கால்களில் 'பிவிசி' குழாய்கள் குத்தி காயம் ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெலிங்டன் ஜெயந்தி நகர் பகுதியில் உலாவரும் காட்டெருமை ஒன்றின் முதுகு அருகே இரும்பு கம்பி குத்திய நிலையில் உலா வருகிறது. இதனை அகற்றி சிகிச்சை அளிக்க, குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதற்கட்டமாக, பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு, கம்பியை அகற்ற முயற்சி செய்யப்பட்டது. எனினும் பலன் கிடைக்காததால், கால்நடை டாக்டரை வரவழைத்து, மயக்க ஊசி செலுத்திய பின், அகற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ