ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் பாராட்டு விழா
பந்தலுார் : பந்தலுார் அருகே தேவாலா அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த, 1991 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்து, 2024 ஆம் ஆண்டு வரை தமிழ் ஆசிரியராக, 35 ஆண்டுகள் இதே பள்ளியில் பணியாற்றியவர் முனைவர் விக்டோரியா.இவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்தினர்.தேவாலா பள்ளிக்கு சென்று தாங்கள் படித்த வகுப்பு அறைகளை பார்த்து நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், ஆசிரியர் விக்டோரியா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். அங்கிருந்து தலையில் கிரீடம் சூடி, மாலை அணிவித்து, சீர்வரிசை பொருட்களுடன் தேவாலா பஜாரில் அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கினர்.