காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி கம்பி அகற்றம்
குன்னுார்; குன்னுாரில் காட்டெருமைக்கு, மயக்க ஊசி செலுத்தி முதுகில் குத்தியிருந்த இரும்பு கம்பியை வனத்துறையினர் அகற்றினர்.குன்னூரில் கடந்த, 4 நாட்களாக வெலிங்டன், ஜெயந்தி நகர், சப்ளை டிப்போ உள்ளிட்ட பகுதியில் முதுகில் இரும்பு கம்பி குத்திய நிலையில் காயத்துடன் காட்டெருமை உலா வந்தது. வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று குன்னுார் ஜோசப் மேல்நிலைப்பள்ளி அருகே உலா வந்த, காட்டெருமையை வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ், பாரஸ்டர்கள் ராஜ்குமார், திலீப் உட்பட வனத்துறையினர் கண்காணித்து, மயக்க ஊசி செலுத்தி கம்பியை அகற்றினர்.தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.