உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆனிக்கல் மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழா

ஆனிக்கல் மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழா

கூடலுார்; மசினகுடி ஆனைகட்டி அருகே உள்ள, ஆனிக்கல் மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது.முதுமலை, மசினகுடி அருகே உள்ள எப்பநாடு அருள்மிகு ஸ்ரீ ஆனிக்கல் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழா, 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறப்புடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு பூ குண்டத்திக்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சியும், 11:00 மணி முதல் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடந்தது. 4:30 மணிக்கு சிறியூர் அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு படுக மொழியில், 'விதியா;மதியா' என்ற சமூக நாடகம் நடந்தது. இரவு, 10:06 மணிக்கு கங்கா பூஜை; நள்ளிரவு 12:00 மணிக்கு அம்மன் தேர் ஊர்வலம் நடந்தது. நேற்று, அதிகாலை 2:30 மணிக்கு பூ குண்டம் திறக்க சிறப்பு பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு பக்தர்கள் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி