உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அன்னுார் துவக்கப் பள்ளியில் அசத்தும் கட்டமைப்பு வசதி

அன்னுார் துவக்கப் பள்ளியில் அசத்தும் கட்டமைப்பு வசதி

அன்னுார்;அன்னுாரில் அரசு துவக்கப் பள்ளியில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அன்னுார் தெற்கு துவக்கப்பள்ளி, 1971ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 110 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நான்கு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழி, ஆங்கில வழி என விருப்பம் போல் தேர்வு செய்து படிக்கலாம். ஸ்மார்ட் வகுப்பறை உள்ளது. கம்ப்யூட்டர்கள் உள்ளன. இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இப்பள்ளி வளாகத்தில் இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மையமும் இதே வளாகத்தில் உள்ளது. வகுப்பறைகள், கழிப்பறைகள், ஸ்மார்ட் போர்டு என தனியார் பள்ளிக்கு நிகராக இங்கு கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது,' என பள்ளி தலைமை ஆசிரியை ஜீவ லதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை