உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்

கூடலுார்: கூடலுார் அருகே, ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்ததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் சாலை மற்றும் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டது. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.கோத்தர்வயல் உள்ளிட்ட பல பகுதியில் வீசிய பலத்த காற்றில், ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் காட்டு யானைகளிடம் இருந்து நேந்திரன் வாழை காப்பாற்றி அறுவடை செய்வது பெரும் போராட்டமாக உள்ளது. தொடர்ந்து, விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது ஓரளவு விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன் வாழைமரம் காற்றில் சாய்ந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ