கிளை மேலாளர் சஸ்பெண்ட்
கூடலுார்:கூடலுார் அரசு போக்குவரத்து கழக, கிளை மேலாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.கூடலுாரில் இயக்கப்படும் அரசு பஸ் ஒன்றில் மழைநீர் கசிவு ஏற்பட்டதாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கூடலுார் போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள்கண்ணன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவரின் சஸ்பெண்ட் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில்,'குறிப்பிட்ட பஸ்சில் ஏற்பட்ட மழைநீர் கசிவு ஏற்கனவே சீரமைக்கப்பட்ட நிலையில், இதனை காரணம் காட்டி கிளை மேலாளரை 'சஸ்பெண்ட்' செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது,' என்றனர்.