மயிலாடு துறையில் சிறுத்தை உலா; பிடிக்க முதுமலை ஊழியர்கள் பயணம்
கூடலுார் : மயிலாடுதுறையில், மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை பிடிக்க உதவும் வகையில், முதுமலையிலிருந்து அனுபவம் வாய்ந்த வனக்காவலர்கள் சென்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், கூரைநாடு சாலையில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலா வருவது, அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.வனத்துறை மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர். இந்நிலையில், சிறுத்தையை கண்காணித்து பிடிக்க, முதுமலை புலிகள் காப்பகத்தில், அனுபவம் வாய்ந்த வனக்காவலர்கள் பொம்மன், காலன் ஆகியோர் நேற்று மயிலாடுதுறை புறப்பட்டு சென்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,' இவர்கள் இருவரும் விலங்குகளை பிடிப்பதில், அனுபவம் வாய்ந்தவர்கள்.இதனால், நிச்சயம் சிறுத்தை பிடிப்படும்,' என்றனர்.