மேலும் செய்திகள்
கல்வராயன்மலையில் கலெக்டர் ஆய்வு
16-Aug-2024
ஊட்டி, : 'வளர்ச்சி பணிகளை வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும்,' என, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தர விட்டார்.ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், 'சாலை சீரமைப்பு, குடிநீர் குழாய் அமைப்பது, பசுமை வீடுகள் கட்டும் பணி,' என, பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளர்ச்சி பணிகள் குறித்து, அவ்வப்போது கலெக்டர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் லட்சுமிபவ்யா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், 'பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு திட்டம், எம்.எல்.ஏ., மேம்பாட்டு திட்டம், மகாத்மா கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம்,' என, பல்வேறு திட்டங்கள் குறித்தும்; தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். 'வளர்ச்சி பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
16-Aug-2024