உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீடுகளில் தொடரும் விரிசல்: அச்சத்தில் மக்கள்

வீடுகளில் தொடரும் விரிசல்: அச்சத்தில் மக்கள்

கூடலுார்:மேல் கூடலுார், கோக்கால் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மேல்கூடலுார் அருகே கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில் ஜூன், 28ம் தேதி பெய்த பலத்த மழையின் போது, ஏழு வீடுகள், சிமென்ட் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியை ஆய்வு செய்த வருவாய் துறையினர், 'விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளில், இரவில் யாரும் வசிக்க கூடாது' என, அறிவுறுத்தினர். அப்பகுதியில் புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், பெய்த மழையின் போது, அப்பகுதியில் மீண்டும் ஆறு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. மூன்று வீடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை போன்று சாலை மற்றும் முதியோர் இல்ல கட்டடத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.அப்பகுதியை துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கல்பனா, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் கூறுகையில்,'விரிசல் ஏற்பட்ட வீடுகளில் யாரும் வசிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். அப்பகுதியை புவியியல் துறையினர் மூலம் ஆய்வு செய்ய உள்ளனர்,' என, கூறினர். தொடர்ச்சியாக, வீடுகளில் விரிசல் ஏற்படுவதால் அச்சமடைந்துள்ள மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை