உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில எல்லையில் சேதமடைந்து வரும் சாலை; வாகனங்களை இயக்க சிரமம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மாநில எல்லையில் சேதமடைந்து வரும் சாலை; வாகனங்களை இயக்க சிரமம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கூடலுார் : தமிழக- கேரள எல்லையில் உள்ள கீழ்நாடுணி பகுதியில், சேதமடைந்து வரும் சாலையை, சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலுார் நாடுகாணியில் இருந்து, கேரளா மாநிலம் மலப்புரம், திருச்சூர்,கோழிக்கோடு பகுதிக்கு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, தமிழகம், கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். சாலையை அரசு பஸ்கள், கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இச்சாலை வழியாக, கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, வருவாய் துறை சார்பில் நாடுகாணியில், நுழைவு வரி மையம் அமைத்து வரி வசூல் செய்யப்படுகிறது.

பராமரிப்பு இல்லை

இந்நிலையில், நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., சாலை, பராமரிப்பு இன்றி பல இடங்களில் சேதமடைந்து உள்ளதால், ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து நீலகிரிக்குள் வரும் வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூல் செய்து வரும் மாவட்ட நிர்வாகம், சேதமடைந்த சாலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை. சாலையில், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுவதுடன், வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. இரவில் வாகன விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டு, ஏப்., மாதத்துக்கு பின்பு, தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரள- தமிழக எல்லையில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. அப்பகுதிகளில் மழை குறைந்தவுடன் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை