ஆர்ப்பாட்டம்
குன்னுார்: குன்னுார் ரயில் நிலையத்தில், ‘தட்சின் ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன்’ மற்றும் சி.ஐ.டி.யு., சார்பில் ரயில்வே பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குன்னுார் கிளை நிர்வாகி கணேசன் தலைமை வகித்தார். அனுஜித் வரவேற்றார். பிரோஸ் கான் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். அதில், ‘ரயில்வே முழுவதும் உள்ள, 29 ஆயிரத்து 608 பணியிடங்கள் சரண்டர் செய்யும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும்; ரயில்வே காலி அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும்,‘ என்பன உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகி செந்தில் நன்றி கூறினார்.