மேலும் செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
06-Jun-2026
குன்னூர்: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள கன்டோன்மென்ட் போர்டு செகண்டரி பள்ளி, இன்ட்ராக்டர்ஸ் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். வருங்கால தலைமுறையினருக்காக பூமியைப் பாதுகாப்போம் என்று கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்தனர. கன்டோன்மென்ட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி டுகினி கிண்டியா (Dukini Kyndiah) தலைமை வகித்தார். பொறியியல் துறை, சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ராணுவத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது இயற்கை பாதுகாப்பது, தூய்மையான பசுமையான சூழலை பேணுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தற்கால சுற்றுச்சூழல் பிரச்னை, அவற்றை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்கள் தயாரித்த விழிப்புணர்வு விளக்கக்காட்சி இடம் பெற்றது.
06-Jun-2026