உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டெருமை தாக்கியதில் எஸ்டேட் காவலர் காயம்

காட்டெருமை தாக்கியதில் எஸ்டேட் காவலர் காயம்

பந்தலுார்; பந்தலுார் அருகே விலங்கூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 50. இவர் தற்போது சோலாடி என்ற இடத்தில் தங்கியிருந்து, தனியார் எஸ்டேட்டில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இரவு காவலர் பணியில் ஈடுபட்டிருந்த இவர், நேற்று காலை எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலையில் நடந்து வந்த காட்டெருமை ஒன்று, இவரை தாக்கி துாக்கி எறிந்தது. இவரின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, காட்டெருமையை அங்கிருந்து துரத்தி இவரை காயங்களுடன் மீட்டனர். தொடர்ந்து, பிதர்காடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தொழிலாளர்கள் உதவியுடன் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, கேரள மாநிலம் பத்தேரிக்கு கொண்டு சென்றனர். பிதர்காடு வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் சாய் சரண் சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.வனத்துறையினர் கூறுகையில், 'கிராமங்களை ஒட்டிய வனப்பகுதிகளை, சமூகவிரோதிகள் தீவைத்து எரிப்பதால் பசுமையான வனங்கள் தற்போது கருகி காணப்படுகிறது. இதனால், வனவிலங்குகள் உணவு தேவைக்காக, எஸ்டேட் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதால், பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பதுடன், வனப்பகுதிகளில் தீ பரவாமல் இருக்க உதவ வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை