மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி : பைக்காரா ஏரியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய, இரண்டு வாட்டர் ஸ்கூட்டர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பைக்காரா சாலையை சீரமைக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை எடுத்தது.இதற்காக, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடந்தது. மேம்பாட்டு பணிகள் முழுமை பெற்றதை அடுத்து, மூடப்பட்டிருந்த படகு இல்லம், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.அங்கு, தற்போது, 26 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. அதில், 17 எட்டு இருக்கை மோட்டார் படகுகள்; 10 இருக்கை மோட்டார் படகு ஒன்று; 15 இருக்கை மோட்டார் படகு ஒன்று; 7 மூன்று இருக்கை அதிவேக படகுகள் உள்ளன. தவிர, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, 5 இருக்கை கொண்ட ஒரு உல்லாச படகு மற்றும் இரண்டு 'வாட்டர் ஸ்கூட்டர்' ஆகியவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில சுற்றுலா பயணியர் வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வாட்டர் ஸ்கூட்டரை பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே இயக்குகின்றனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், ' இந்த வாட்டர் ஸ்கூட்டரில் அமர்ந்து செல்லும் போது, ஏரி மீது பறப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. 'மழையின் காரணமாக, பைக்காரா ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் ரம்மியமாக காட்சியளிக்கிறது,' என்றனர்.
03-Oct-2025