உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை வரத்து அதிகரிப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி

தேயிலை வரத்து அதிகரிப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி;நீலகிரியில், பரவலாக பெய்த மழைக்கு தேயிலை தோட்டங்களில் இலை வரத்து அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னுார், குந்தா பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. தேயிலை விவசாயிகள் உரமிட்டு தோட்டங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரமிட்டு பராமரித்து வந்த தேயிலைத் தோட்டங்கள் துளிர்விட்டு மகசூல் அதிகரித்துள்ளது.கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக இலை கொள்முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது, இலைகளின் தரத்திற்கு ஏற்ப, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 முதல், 24 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால், தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ