உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தண்ணீரில் சிக்கிய சுற்றுலா வாகனம்: பயணிகளை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

தண்ணீரில் சிக்கிய சுற்றுலா வாகனம்: பயணிகளை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

ஊட்டி;ஊட்டியில் பெய்த கனமழையின் போது, ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கிய தண்ணீரில் சுற்றுலா வாகனங்கள் தத்தளித்தன; பயணிகளை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி படகு இல்லம் சாலையில், ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. ஊட்டியில் மழை பெய்யும் நாட்களில், ரயில்வே பாலம் அடியில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று பகல் ஊட்டியில் பெய்த கனமழையில், வழக்கம் போல், ரயில்வே பாலம் அடியில் தண்ணீர் தேங்கியது. அப்போது, படகு இல்லத்திற்கு சென்று வந்த சுற்றுலா வாகனகள் தண்ணீரில் தத்தளித்தன. சில வாகனங்கள் சென்றன. ஒரு வாகனத்தின் இஞ்சின் இயக்கம் நின்றது. வாகனத்திற்குள் இருந்த சுற்றுலா பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்துவிரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுற்றுலா பயணிகளை வாகனத்தில் இருந்து துாக்கி பாதுகாப்பாக மறுப்புறமுள்ள சாலையில் விட்டனர். குளம் போல் தேங்கிய தண்ணீர் காரணமாக, டவுன் பஸ்கள் இரண்டு மணிநேரம் 'பெர்ன்ஹில் வழியாக திருப்பி விடப்பட்டன.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'ஊட்டி படகு இல்லத்துக்கு செல்ல உள்ள இந்த சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி சிறிய வானங்கள் இங்கு சிக்கி கொள்கின்றன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்