உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடையை வரவேற்க பூத்துள்ள பிளேம் ஆப் பாரஸ்ட் மலர்கள்

கோடையை வரவேற்க பூத்துள்ள பிளேம் ஆப் பாரஸ்ட் மலர்கள்

கூடலுார்; முதுமலை, மசினகுடியில் கோடையை வரவேற்கும் வகையில் பூத்துள்ள 'பிளேம் ஆப் பாரஸ்ட்' மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் கடந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட அதிக பருவமழை பெய்தது. நடப்பு ஆண்டு பெய்ய வேண்டிய கோடை மழை இதுவரை பெய்யவில்லை. இந்நிலையில், வறட்சியை வரவேற்கும் வகையில் கோடைக்கு முன்னதாகவே, 'பிளேம் ஆப் பாரஸ்ட்' மலர்கள் பூத்துள்ளது. வறட்சியான வனப்பகுதியில் இதன் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இந்த பூக்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் தீ ஜுவாலை எரிவது போல் காட்சி தருவதால், 'பிளேம் ஆப் பாரஸ்ட்' என, அழைக்கப்படுகிறது. கோடைக்கு முன்பாக இந்த மலர் பூத்துள்ளதால் வறட்சியின் தாக்கம், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ