மேலும் செய்திகள்
தடாகம் மண் கொள்ளை; சிறப்பு குழுவினர் அதிரடி
19-Feb-2025
குன்னுார்; ஊட்டி அருகே, பி.மணியட்டி கிராமத்தில், 600 க்கும் மேற்பட்டோர் பூணுால் அணியும் விழாவில் பங்கேற்றனர்.ஊட்டி அருகே, பி மணியட்டி, சின்ன மணியட்டி கிராமத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பூணுால் அணியும் விழா நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த ஆண்டு விழாவில், பி.மணியட்டி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகளுடன் விழா துவங்கியது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அருகில் உள்ள நீரோடையில் பால் ஊற்றி, வழிபாடுகள் நடத்தி சாஸ்திரம் செய்தனர். பிறகு, படுக மக்களின் ஆடல், பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வீடுகளுக்கு சென்ற லிங்காயத்து மக்கள், 600க்கும் மேற்பட்டோர், தங்கள் வீடுகளில் பூணுால் அணிந்து கொண்டனர்.
19-Feb-2025