உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கால்வாயில் கொட்டப்படும் குப்பை

கால்வாயில் கொட்டப்படும் குப்பை

பந்தலுார்; சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொளப்பள்ளி பஜார் பகுதி அமைந்துள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அதனை ஒட்டி குடியிருப்புகள் அதிக அளவில் அமைந்துள்ளதுடன், தமிழக, கேரளா இணைப்பு சாலையும் அமைந்துள்ளது. கடைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து 'பிளாஸ்டிக்' உள்ளிட்ட கழிவு பொருட்களை, கால்வாயில் வீசி எறிவதால் கழிவு நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும், ஊராட்சி நிர்வாகம் கால்வாயை சுத்தப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கொசுக்கள் உற்பத்தியாகி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை