உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

குன்னுாரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

குன்னுார், : குன்னுார் சிம்ஸ்பார்க் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும், 21ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின், நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகிக்கிறார். அதில், குன்னுார், சிம்ஸ் பார்க், மவுண்ட் ரோடு, மவுண்ட் பிளசன்ட், எடப்பள்ளி பேரக்ஸ், ஆருகுச்சி, எடக்காடு அதிகரட்டி, அரவேனு, கட்டப்பட்டு, வெஸ்ட்புரூக், கீழ் கோத்தகிரி, நெடுகுளா, கோத்தகிரி பிரிவு அலுவலகங்களை சார்ந்த மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை