உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குந்தசப்பையில் கனமழை தடுப்பு சுவர் இடிந்தது

குந்தசப்பையில் கனமழை தடுப்பு சுவர் இடிந்தது

ஊட்டி : ஊட்டி அருகே குந்தசப்பையில் கன மழைக்கு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்து இரு நாட்களுக்கு முன்பு மாலை, திடீரென ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. ஊட்டி நகரில் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறிய மழை நீர் கோடப்பமந்து கால்வாயில் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல், நகரில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் பணிமனையில் மழை நீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஊட்டி அருகே குந்தசப்பை பகுதியில் குடியிருப்பை ஒட்டி கட்டப்பட்ட, 10 அடி உயர தடுப்பு சுவர் இடிந்தது. புறநகர் பகுதிகளில் சில இடங்களில், காய்கறி தோட்டங்களில் மழை நீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. விவசாயிகள் கூறுகையில், 'ஆய்வு செய்து உரிய நிவாரணம் தர வேண்டும்; வருவாய் துறையினர் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ