மேலும் செய்திகள்
குடியிருப்பு பகுதிகளில் தொடரும் மண் சரிவு
30-Jul-2024
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பெய்த கன மழையில், மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மழை மட்டுமின்றி கடும் மேகமூட்டம் நிலவி வருவதால், குளிரான காலநிலை நிலவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேகமூட்டத்தால் இருள் சூழ்ந்து, வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. பஜார் பகுதி சாலைகளில், மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மக்கள் நடந்து செல்வதில் பாதிப்பு ஏற்படுத்தியதுடன், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.அத்திக்குன்னா சாலையில் அத்திமாநகர் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை மூலம், பொக்லைன் உதவியுடன் மண்ணை அகற்றினர். மழை தொடர்வதால், வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
30-Jul-2024