மேலும் செய்திகள்
இ.முன்னணி ஆர்ப்பாட்டம்
28-Aug-2024
பெ.நா.பாளையம் : வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், இது தொடர்பாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, தமிழக முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்றுமுன்தினம் மதியம், 3:00 மணிக்கு கோவை மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி பிரிவில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களுடைய உடமைகள் அழிக்கப்படுவதையும் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன், கோட்ட செயலாளர் பாலன், ராஜ்குமார், வடக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் தியாகராஜன், செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்தி, செயலாளர் படையப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
28-Aug-2024