உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி ; நீலகிரியில் 135 பேரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி ; நீலகிரியில் 135 பேரிடம் விசாரணை

பந்தலுார்;கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 40 பேர் பலியான நிலையில், நீலகிரியில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த, 135 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் கள்ளச்சாரயம் காய்ச்சிய மற்றும் விற்பனையில் ஈடுபட்ட, 135 பேரின் பெயர்கள், அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில், பலரின் வீடுகளில் நேற்று அதிகாலை உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். விசாரணையும் நடந்து வருகிறது.அத்துடன் கிராமப்புறங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அல்லது விற்பனை செய்வது தெரிய வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் மக்களிடம் அறிவுறுத்தி உள்ளனர். தேவாலா போலீஸ் டி.எஸ்.பி. சரவணன் கூறுகையில், ''நீலகிரியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து அரசு உத்தரவை தொடர்ந்து நேற்று அதிகாலை, பல வீடுகள்; பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடந்தது. ஆனால், எந்த பகுதியிலும் இது போன்ற எந்த நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ