ஊட்டி:'ஜீவன் ரக் ஷா' பதக்க விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நடப்பாண்டு, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு ஆகியவற்றில் ஈடுபட்டு, மனித உயிர்களை மீட்பவர்களுக்கு, 'சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா, உத்தம் ஜீவன் ரக் ஷாமற்றும் ஜீவன் ரக் ஷா,' பதக்கங்களை அறிவித்து மத்திய அரசால், சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.மிகவும் அபாயகரமாக உள்ளவரை வீரத்துடனும், துணிச்சலுடனும், தாமதமின்றி செயல்பட்டு, போராடி மீட்பவருக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு ஜீவன் ரக் ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விபரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.gov.inமூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை, 'ஜீவன் ரக் ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள், மூன்று நகல்களுடன், 'மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், எச்.ஏ.டி.பி., திறந்தவெளி மைதானம், தாவரவியல் பூங்கா அருகில் ஊட்டி, நீலகிரி மாவட்டம்,' என்ற முகவரிக்கு, 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.