உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் சாரல் மழை

ஊட்டியில் சாரல் மழை

ஊட்டி:நீலகிரியில் ஆண்டு சராசரி மழை அளவு, 152 செ.மீ., கடந்தாண்டில் பருவமழை பொய்த்ததால் தேயிலை, மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில், ஏப்., மாதம் துவங்கியும் கோடை மழை பெய்யவில்லை. விவசாயிகள் மழை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, 4:30 மணியளவில் ஊட்டியில் சாரல் மழை பெய்ய துவங்கியது.சிறிது நேரத்தில் மழை நின்றது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான எப்பநாடு, கடநாடு, தும்மனட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும், 20 நிமிடம் மழை பெய்து நின்றது. மழை தொடரும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் சில நிமிடம் பெய்து மழை நின்றதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை