மல்லேஸ்வர கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மஞ்சூர்,; கோக்கலாடா கிராமத்தில் உள்ள மல்லேஸ்வர சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மஞ்சூர் அருகே கோக்கலாடா கிராமத்தில் மல்லேஸ்வர சுவாமி திருகோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணி நடந்து வர்ணம் பூசி பொலிவு படுத்த கிராம மக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில மாதங்களாக கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடந்தது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று முன்தினம், கணபதி ஹோமம், சிவ சதநாம ஹோமம், மஹா பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ஊர் தலைவர் ராமலிங்கன் தலைமையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோக்கலாடா கிராமத்தில் தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பஜனை அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது