உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின்சாரம் தாக்கி ஊழியர் பலி மஞ்சூர் போலீசார் விசாரணை

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி மஞ்சூர் போலீசார் விசாரணை

ஊட்டி;மின்பாதை பராமரிப்பு பணியின் போது, மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர்பவானி அணை பகுதியிலிருந்து அவலாஞ்சி மின் நிலையம் வரை மின் பாதை பராமரிப்பு பணி, உதவி பொறியாளர் பூபதி தலைமையில் நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மாலையில் பணி முடிந்த பின், மின் இணைப்பு சரிபார்க்கப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் ஆனந்த், 38, சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி காயமடைந்த ரமேஷ், 50, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை