மேலும் செய்திகள்
வேளாங்கண்ணி மாதா திருத்தல திருவிழா
31-Aug-2024
ஊட்டி;ஊட்டி இருதய ஆண்டவர் பேராலயத்தில் புனித வேளாங்கண்ணி மாதா திருவிழாவை கொண்டாடும் விதமாக, திருப்பலி நடந்தது.ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் பங்கு தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்கு தந்தை இமானுவேல் முன்னிலையில் பாடல் திருப்பலி நடந்தது.தொடர்ந்து, கொடியேற்றப்பட்டது. வரும், 8ம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று மாலை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், திருப்பலி, தேர் பவனி நடக்கிறது.
31-Aug-2024