உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரியில் மருத்துவ முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு

கோத்தகிரியில் மருத்துவ முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு

கோத்தகிரி; கோத்தகிரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கோத்தகிரி ஈழுவா-- தீயா நல சங்கம் மகளிர் பிரிவு சார்பில் நடந்த முகாமில், நிர்வாகி பொன்னம்மா வரவேற்றார். கோத்தகிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வனிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ''பெண்கள், தங்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்கின்றனர். ஆனால், தங்களது உடல் நலம் குறித்து கவலைப்படுவது இல்லை. எனவே, தங்களுக்கு ஏற்படும் உடல் நலம் குறைவு குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்து, உரிய சிகிச்சை பெற்று கொள்ள முன்வர வேண்டும். மகளிர் தினத்தில் அனைவரும் பயன் பெறும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது பாராட்டுக்குரியது,'' என்றார்.தொடர்ந்து, பொது மருத்துவர் அனுஸ்ரீ, கண் சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவ பரிசோதனை செய்தனர். சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி அனுஜெய் நன்றி கூறினார். திரளான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ