உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மொபைல் போன் ஒப்படைப்பு

மொபைல் போன் ஒப்படைப்பு

கோத்தகிரி: குன்னுார் அளக்கரை பகுதியை சேர்ந்த பிரதாப், தனது பணப்பை மற்றும் மொபைல் போன் தொலைந்து விட்டதாக, கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோத்தகிரி போலீசார் விசாரித்த நிலையில், நகராட்சி துாய்மை மேற்பார்வையாளர் ராஜூ மற்றும் பணியாளர் கவுதம் ஆகியோர், குப்பைகளை சேகரிக்கும் போது, அங்கு பணப்பை கிடந்ததாக தெரியவந்தது. அதனை கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 2,000 ரூபாய் ரொக்கம் இருந்துள்ளது. அதனை பிரதாப்பிடம் ஒப்படைத்தனர். பணப்பையை கண்டெடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !