உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புது இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

புது இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

மேட்டுப்பாளையம்:காரமடை, சிறுமுகை போலீஸ் ஸ்டேஷன்களில், புது இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.தமிழகம் முழுவதும் அண்மையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் காரமடை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ராஜசேகரன், கருமத்தம்பட்டிக்கும், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஞானசேகரன், காரமடை போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், சிறுமுகை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சித்ரா, ஊட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கும், நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிர்மலா, சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதையடுத்து, காரமடை இன்ஸ்பெக்டராக ஞானசேகரன், சிறுமுகை இன்ஸ்பெக்டராக நிர்மலா, ஆகிய இருவரும் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி