உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் செயல்படாத ஏ.டி.எம்.,

பந்தலுாரில் செயல்படாத ஏ.டி.எம்.,

பந்தலுார்;பந்தலுார் அருகே, பிதர்காடு பஜார் பகுதியில், ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.இந்நிலையில், வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் பழுதடைந்து பல நாட்கள் கடந்தும் அதனை சீர் செய்ய வங்கி நிர்வாகம் முன் வரவில்லை.இதனால், தங்களின் பண பரிவர்த்தனைக்காக ஏ.டி.எம்.,மையத்தை நாடும் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதன் அருகே பிற வங்கிகள் இல்லாத நிலையில், சுல்தான் பத்தேரி அல்லது தேவர்சோலை பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, பழுதடைந்த ஏ.டி.எம்., இயந்திரத்தை சீரமைக்க வங்கி நிர்வாகம் முன் வரவேண்டியது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ