உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வி.பி., தெருவில் ஆக்கிரமிப்பு மக்கள் நடமாட சிரமம்

வி.பி., தெருவில் ஆக்கிரமிப்பு மக்கள் நடமாட சிரமம்

குன்னுார்: குன்னுார் வி.பி., தெரு; மார்க்கெட் சாலையில், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.குன்னுார், வி.பி., தெரு பகுதியில் இருந்து மார்க்கெட் செல்லும் பாதையில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடை முன்புறம் நீட்டிக்கப்பட்டது. இங்கு ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகள், இதற்கு தீர்வு காணாமல், ஆளும்கட்சியினர் என்பதால் விட்டு சென்றனர். இந்த கடைகளின் முன்புறம், மார்க்கெட் வருபவர்கள் இருசக்கர வாகனங்களையும் நிறுத்தி கடைக்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால், மார்க்கெட்டிற்கு மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். அதே நேரம் மார்க்கெட்டுக்கு குப்பைகளை எடுக்க வரும் வாகனங்களும் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகிறது. எனவே, இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை