உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நடைபாதையோரம் வளர்ந்த செடிகளால் மக்கள் பாதிப்பு

நடைபாதையோரம் வளர்ந்த செடிகளால் மக்கள் பாதிப்பு

கோத்தகிரி: கோத்தகிரி மார்க்கெட் சாலையோர நடைபாதையில் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், மக்கள் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.கோத்தகிரி நேரு பூங்காவை ஒட்டி மார்க்கெட் சாலையோரத்தில், நடைப்பாதை அமைந்துள்ளது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.நேரு பூங்காவில் வளர்ந்துள்ள காட்டு செடிகள், நடைப்பாதையோரம் சாய்ந்துள்ளன. தவிர,சில இடங்களில், 'இன்டர்லாக்' கற்கள் பெயர்ந்து, குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட, பொதுமக்கள் நடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, செடிகளை அகற்றி, 'இன்டர்லாக்' கற்களை நேர்த்தியாக அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை