மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
15 hour(s) ago
ஊட்டி:கோர்ட் சாலையில் அபாயகரமாக இருப்புறம் ஓங்கி வளர்ந்துள்ள கற்பூர மரங்களால் அச்சம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி அருகே காக்கா தோப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. தமிழக சந்திப்பிலிருந்து இரண்டு கி.மீ., துாரத்தில் கோர்ட் அமைந்துள்ளது. கோர்ட் செல்லும் சாலையின் இருப்புறம் ஏராளமான கற்பூர மரங்கள் வானுயந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த கன மழை, பலத்த காற்றுக்கு இச்சாலையில் ஏராளமான கற்பூர மரங்கள் விழுந்தது. சாலையோரம் இன்னும் ஏராளமான மரங்கள் அபாயகரமான நிலையில் உள்ளது.இச்சாலையில், தினமும் நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், வக்கீல்கள், வழக்கு விசாரணைக்கு செல்லும் நபர்கள் , போலீசார் என ஏராளமானோர் சாலையை பயன்படுத்துகின்றனர். இங்கு இருப்புறம் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு சில மரங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள அபாயகரமான மரங்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டியது அவசியம்.
15 hour(s) ago