உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பட்ஜெட் உரை நேரடி ஒளிபரப்பை புறக்கணித்த பந்தலுார் மக்கள்

பட்ஜெட் உரை நேரடி ஒளிபரப்பை புறக்கணித்த பந்தலுார் மக்கள்

பந்தலுார்; மாநில அரசின் பட்ஜெட் அறிவிப்பு, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் மக்கள் யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. மாநில சட்ட சபையில் 2025--26ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிகழ்வை மாநிலத்தின், 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதில், 'சென்னை மாநகராட்சியில் மட்டும், 100 இடங்கள்; மற்ற 24 மாநகராட்சிகளில், 48 இடங்கள்; 137 நகராட்சிகளில் 24 இடங்கள்; 425 பேரூராட்சிகள்,' என, மக்கள் கூடும் இடங்களில், அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக, எல்.இ.டி., திரை; மக்கள் அமர இருக்கைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தயார் செய்யப்பட்டு இருந்தது. அதில், பந்தலுார் சாலை ஓரத்தில் தனியார் மண்டபத்தின் முன் பகுதியில், இருக்கை வசதிகளுடன், டிஜிட்டல் திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே அமர்ந்து நிகழ்ச்சி பார்வையிட்டார். மீதமுள்ள இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை