மேலும் செய்திகள்
பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
26-Aug-2024
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலஷ்டமி விழா நடந்தது.விழாவை ஒட்டி குழந்தைகள் கிருஷ்ணராகவும், ராதையாகவும் வேடமணிந்து நடனங்கள் மற்றும் நாடகங்கள் நடத்தினர். விழாவில், கிருஷ்ணரின் பிறப்பு, வசுதேவர் கூடையில் கிருஷ்ணரை சுமந்து செல்லும் காட்சி, ஆதிசேஷன் குழந்தையை பின் தொடர்ந்து செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை குழந்தைகள் தத்துரூபமாக நடித்துக் காட்டினர். மழலையர் பிரிவு குழந்தைகளின் நடனம், பாட்டு பார்வையாளர்களை கவர்ந்தது.பள்ளி தாளாளர் டாக்டர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் வல்சலா உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
26-Aug-2024