உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்; சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்; சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு

கூடலுார்; மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவங்கி, 11ம் தேதி வரை நடக்கிறது.நீலகிரி மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற, மசினகுடி அருள்மிகு பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை துவங்குகிறது. காலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.8ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், அபிஷேகம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கங்கை பூஜை நடக்கும். 10ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம்; 11ம் தேதி காலை மாவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகிறது.ஐந்து நாட்கள் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, கூடலுார், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா வழக்கம் போல எந்த மாற்றமும் இன்றி நடக்கும். பக்தர்கள் வழக்கம் போல் நடைமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. விழா தொடர்பாக, வரும் தவறான, தகவல்களில் உண்மைஇல்லை. அதனை பக்தர்கள் நம்ப வேண்டாம்,' என்றனர்.

வனத்தீயை தடுக்க ஒத்துழைக்கணும்...

சிங்கார வனச்சரகர் தனபால் கூறுகையில், ''பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, வனத்தீ ஏற்படுவதை தடுக்க ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சாலையை ஒட்டிய வனப்பகுதியில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், போலீசார் போக்குவரத்து சீரமைக்க வசதியாக பொக்காபுரம் சாலையில், 5 இடங்களில் கண்காணிப்பு முகாம், அமைக்கும் பணியும் நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை