உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பி.டி.ஓ.,க்கள் கூண்டோடு மாற்றம்

பி.டி.ஓ.,க்கள் கூண்டோடு மாற்றம்

அன்னுார்;கோவை மாவட்டத்தில் ஒன்பது பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பிறப்பித்துள்ள உத்தரவு : பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளார். மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, சர்க்கார் சாம குளத்திற்கும் அங்கு பணிபுரிந்த ஜெயக்குமார் தொண்டாமுத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ராமமூர்த்தி பெரியநாயக்கன்பாளையத்திற்கும், ஜென்கின்ஸ் கிணத்துக்கடவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சதீஷ்குமார் பெரியநாயக்கன்பாளையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜலட்சுமி மதுக்கரைக்கும், ஆனைமலையில் பணிபுரிந்த மோகன் பாபு, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கும், லதா, கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 100 நாள் வேலை திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்னுார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கிய சாமுவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சூலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா, பதவி உயர்வு அளிக்கப்பட்டு பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள் குடியேற வேண்டும். அங்கு வசிக்கும் முகவரியை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை