உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்

பந்தலுார்:பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் மழையால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டு, மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஊட்டி சமூக சேவை சங்கம் சார்பில், மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, தேவாலா தனியார் மண்டபத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விஜய சுந்தரி வரவேற்றார். இயக்குனர் பாதர் ஜான் ஜோசப் தனிஷ் தலைமை வகித்து, ஏழை மக்கள் பயன் பெறுவதற்கான திட்டங்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் அதற்கான வழிகாட்டல்கள், அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, 144 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுப்ரபா தலைமையில், குழுவினர் செய்திருந்தனர். கவுன்சிலர்கள் ஹாலன், செல்வராணி, வியாபாரிகள் சங்க தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் பாக்கியவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ