உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

சூலுார்;தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின், 43 ஆண்டு மகா சபை கூட்டம், சூலுாரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சங்க நிர்வாகிகள் சரவணன், பாலகுமார், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்களை பராமரிக்க அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு, வாரியமே ஏற்று நடத்த வேண்டும்.கல்வி தகுதி அடிப்படையில் பதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை